கொழும்பு 12, சென் செபஸ்தியன் தமிழ் மகா வித்தியாலய மீலாதுந்நபி விழா கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம். ஹுசைன்தீன் (அகில இலங்கை சமாதான நீதவான்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்புப் பேச்சாளர்களாக மௌலவி எம். என்.எம். சுபைர் (ஷிராஜி), மௌலவி எம். பிர்தவுஸ் (மஸ்ஊதி) ஆகியோர் கலந்து கொண்டனர். அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நலன்புரி அங்கத்தினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்
மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.. படங்களில் பாடசாலை அதிபர் எம். ஹுசைன்தீன், மௌலவி எம்.ஜி..எம், பிர்தவுஸ் (மஸ்ஊதி) ஆகியோர் உரையாற்றுவதையும், ஐந்தாம் வகுப்பு மாணவி பாத்திமா ஷமிஹா கஸீதா பாடுவதையும் காணலாம்.




