வரலாற்றுச் சிறப்பு மிக்க மின்னொளியிலான பூப்பந்து சுற்றுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் பங்கேற்பு.

Written By avathani Media Network on Sunday, January 1, 2017

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி வரலாற்றில் முதன்முறையாக குழுக்களுக்கிடையிலான பூப்பந்து சுற்றுப் போட்டி கடந்த (30.12.2016 வெள்ளி) ஆரயம்பதி உள்ளக பூப்பந்து அரங்கிள் இடம் பெற்றது நிகழ்வின்; பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கலந்து கொண்டார்.

காத்தான்குடி ஈகெயார் கழகத்தின் ஏற்பாட்டினில் அதன் தலைவர் ஏ.சீஎம்.றம்சான் தலைமையில் நடைபெற்ற மேற்படி இரட்டையர்களுக்கான பூப்பந்து சுற்றுப்போட்டியில் நான்கு அணியினர் பங்குபற்றியதுடன் அணியினர் தலா 12 ஆட்டத்தில் கலந்து கொண்டதுடன் இரு அணியினர் இறுதியாட்டத்திற்கு தெரிவாகினர்.

மேற்படி போட்டியின் இறுதிச் சுற்றில் காத்தான்குடி எம்.முஸ்தபா,ஆரயம்பதி திரு சத்தியசீலன் அணியினர் மற்றும் காத்தான்குடி எம்.என்.எம்.நாசீக், எம்.எஸ்.எம்.நுஜ்ஹான் ஆகியோர் பலப்பரீட்சை நடாத்தினர் இதில் 21க்கு 19 என்ற அடிப்படையில் எம்.என்.எம்.நாசீக், எம்.எஸ்.எம்.நுஜ்ஹான் அணியினர் வெற்றி பெற்றனர்.

இறுதிப் போட்டியின் நடுவராக ஆர்.எம்.லாபிர் கடமையாற்றினார்.

வெற்றிபெற்ற அணியினருக்கான வெற்றிக் கிண்ணம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி போட்டியில் வைத்தியர் டீ.எம்.மாஹிர், காத்தான்குடி மின் அத்தியட்சகர் பொறியியலாளர் எம்.சீ.எம்.நௌபல் உட்பட மட்;டக்களப்பு,ஆரயம்பதி, காத்தான்குடியை சேர்ந்த பல இளம் வீரர்களும் பங்குபற்றியிருந்தனர்; என்பதும் குறிப்பிடத்தக்கது.











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.