(ஏ.எல்.டீன்பைரூஸ்)
பாலமுனை மதரசதுல் அன்னூர் பகுதி நேர அல்குர்ஆன் மதரசாவிற்கான மின்பிறப்பாக்கி கையளிக்கும் நிகழ்வு (30.12.2016 வெள்ளி ) தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம்.பைரூஸ்(பலாஹி) தலைமையில் மதரசா மண்டபத்தில் நடைபெற்றது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கலந்து கொண்டார்.
பாலமுனை மதரசதுல் அன்னூர் மற்றும் அல்ஹிதாயா சனசமூக நிலய நிர்வாகிகளின்; வேண்டுதலை அடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்Pட்டின் கீழ் சுமார் 65000ஃஸ்ரீ பெறுமதியான ஜெனறேட்டர் (மின்பிறப்பாக்கி) ஒன்றினை கையளித்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்...
பாலமுனையில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அன்னூர் பகுதி நேர அல்குர்ஆன் மனனபீடத்திற்கு இவ்வாறான உதவிகளை நேரடியாக கலந்து கொண்டு கையளிக்க வாய்ப்பு கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்று தெரிவித்தார்.
உண்மையில் உலமாக்கள்,ஹாபிழ்கள் என்பவர்கள் இந்த சமூகத்தினுடைய ஆத்மீக தலைவர்கள்.
பெறுமதி மிக்கவர்களை பெறுமானம் குறைத்து கதைக்கின்ற நிலமைகளை இன்று நாம் அவதானிக்க முடிகின்றது.
உலகலாவிய ரீதியில் வைத்தியர்கள் பொறியியலாளர்கள்,இன்னோரென்ன பட்டம் பதவிகளையுடையவர்கள்தான் உயர்தவர்கள் என்கின்ற சிந்தனை குறிப்பாக முஸ்லிம் சமூகத்திடம் இன்று கானப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
எந்த ஒரு விடயத்தையும் நாங்கள் செய்ய வேண்டுமாயின் உலமாக்களுடைய தலைமைத்துவத்தின்,வழிகாட்டலின் கீழு; நாம் செயல்படுகின்ற போது இரண்டு வகையான நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.
ஒன்று இன்மை தொடர்பானது மற்றயது மறுமை தொடர்பானது என்றும் தெரிவித்தார்.
பாலமுனையில் பெண்களுக்கான பகுதி நேர அல்கர்ஆன் மதரசா ஒன்றினை ஆரம்பிக்க இருப்பதாக இங்கு தெரிவித்தனர் நல்ல விடயம் அவ்வாறான விடயங்களுக்கு எதர்காலத்தில் எங்களால் முடியுமான அளவு உதவ முடியும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வின் போது மதரசதுல் அன்னூர் அதிபர் கே.எம்.சுல்தான்(பலாஹி) நிர்வாக சபை உறுப்பினர்கள், பாலமுனை அல்ஹிதாயா சனசமூக நிலையத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், மதரசா மாணவர்கள்,மஹல்லா வாசிகள் ஊடகவியாலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
