ஆபத்துமிக்க டெங்கு நோயிலிருந்து எமது மக்களை பாதுகாப்பது எம் எல்லோர்மீதும் கடமையாகும் சிப்லி பாறூக்.

Written By avathani Media Network on Sunday, January 1, 2017

(ஏ.எல்.டீன்பைருஸ்)

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்'; அந்த வகையில் ஆபத்து மிக்க டெங்கு நோயிலிருந்து எமது சின்னஞ்சிறு குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைத்து மக்களையும் பாதுகாப்பது எம் எல்லோர்மீதும் கடமையாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

மழைகாலம் என்பதனால் டெங்கின் ஆபத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் (புகை அடிக்கும் வேலைத்திட்டத்தினை) கடந்த (29.12.2016 வியாழன்) புதிய காத்தான்குடி விடுதி வீதியிலிருந்து அதிரடியாக ஆரம்பித்துவைத்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்.

அவர் கருத்து தெரிவிக்கையில் 

நாம் எமது சக்திக்கு ஏற்ப எமது அதிகாரங்களைப் பயன்படுத்தி எமது மக்களின் தேவைகளை இனம்கன்டு உரிய காலத்தில் அவர்களின் காலடிகளுக்குச் சென்று பூர்த்தி செய்து கொடுப்பதுதான் எமது தலையாய கடமையும் பொறுப்புமாகும் என்று தெரிவித்தார்.

குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு அறிக்கை விடுவதும், தேர்தல் காலங்கள் வந்தால் மாத்திரம் மக்களின் காலடிகளுக்கு சென்று வாக்கு போடுமாறு வேண்டுததும் வேடிக்ககையான விடயம் என்றும் தெரிவித்தார் பொறியியலாளர் சிப்லி பாறூக் 

காத்தான்குடியை பொறுத்த மட்டடில் தற்சமயம் டெங்கின் ஆபத்திலிருந்து எமது மக்கள் அல்லாஹ்வின் உதவியோடு பாதுகாக்கப்பட்டுள்ளனர். இருந்த போதும் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பதுடன் தங்களது சுற்று சூழலை சுத்தமாகவும் சுகாதாரதத்துடன் வைத்திருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.

தேவையேற்படின் ஊர்முழுவதும் டெங்கிக்கான புகையினை அடிப்பதற்கான சகல ஆலோசனைகள் மற்றும் அதற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளை தான் செய்து கொடுக்க தயாராக இருப்பதாகவும் கிழக்க மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.