அரச இலக்கிய விருது வழங்கல் - 2017 2016 ஆம் ஆண்டுக்கான நூல் மதிப்பீடு

Written By avathani Media Network on Friday, January 27, 2017

உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பாக இலங்கை எழுத்தாளர்களுக்கும் மற்றும் நூல் வெளியீட்டாளர்களுக்கும் இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது. 

2017 ஆம் ஆண்டு அரச இலக்கிய விருது வழங்கும் வைபவத்தின் பொருட்டு 2016 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட நூல்களை மதிப்பீடு செய்யும் போது அதனை முறையாகவும் சீராகவும் மேற்கொள்ளும் நோக்கில் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தமது நூல்களை நேரடியாக சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டு ஜனவ¬ரி 01 ஆம் திகதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 31 ஆம் வரையிலான காலப்பகுதியில், முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட, 48 பக்கங்களுக்கு குறையாத, ஒரு நூலின் மூன்று (3) பிரதிகள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட வேண்டிய நூல்களை 'அரச இலக்கிய விழா ஏற்பாட்டு பிரிவு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல' என்ற முகவரிக்கு கிடைக்கக்கூடியதாக பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஒப்படைக்கலாம். நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் தினம் 2017 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஆகும்.

அரச விருது வழங்கலுக்காக நூல்களை மதிப்பீடு செய்வதற்கு கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரமான நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

• சுய நாவல்கள் 

• சுய சிறுகதைகள் 

• சுய கவிதை தொகுப்புகள்

• சுய இளையோர் இலக்கிய படைப்புகள்

• சுய பாடலாக்கத் தொகுப்புகள்

• சுய நாடகங்கள்

• சுய அறிவியல் புனைகதைகள்

• சிறுவர் இலக்கிய படைப்பு (16 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

• சுய புலமைசார் மற்றும் ஆய்வுசார் படைப்புகள் 

• மொழிபெயர்ப்பு - நாவல்

• மொழிபெயர்ப்பு – சிறுகதைகள் 

• மொழிபெயர்ப்பு - கவிதை தொகுப்புகள்

• மொழிபெயர்ப்பு – நாடகங்கள்

• மொழிபெயர்ப்பு – புலமைசார் மற்றும் ஆய்வுசார் படைப்புகள்

• நானாவித விடயங்கள்



இது குறித்த மேலதிக விபரங்களுக்காக தொடர்பு கொள்ளவும்

தொ.பே.: 011-2872030 அல்லது 011-2872031



கலாசார அலுவல்கள் பணிப்பாளர்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.