மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி தொடக்கம் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் சமய, கலாசார, தபால்துறை அமைச்சின் இணைப்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி பிரசார இணைப்புச் செயலாளருமான அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.ரஸ்ஸாக், அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், தொழிலதிபர்களான எம்.எச்.நாசர், எம்.எச்.எம்.இப்ராஹிம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இதன்போது வசதி குறைந்த 200 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவிருப்பதாக மன்றத்தின் செயலாளர் எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.

