சாய்ந்தமருது பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு

Written By avathani Media Network on Tuesday, November 8, 2016

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு எதிர்வரும் 12ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா பிரதம அதிதியாகவும் அஷ்ஷெய்க் அலி அஹமட் ரஷாதி பிரதம பேச்சாளராகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதன்போது 36 இலட்சத்து 19150 ரூபா பணமும் 193 மூடை நெல்லும் 70 வறிய குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்படவிருப்பதாக நிதியத்தின் பணிப்பாளர் ஏ.சி.சமால்தீன் தெரிவித்தார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.