அரிக்கிறது ஆ...காயம்

Written By avathani Media Network on Saturday, November 19, 2016

(Mohamed Nizous)

ஆ-காயம்
அன்று போலவே
'அரி'க்கத் தொடங்குகிறதே

நீர் 'காவி' மேகங்கள்
நெருப்பு மின்னலைக் கக்க,
'டான்' 'டான்' என்று
தகரங்கள் ஒலி எழுப்ப,
அப்பாவிப் பிள்ளைகள்
'ஆ(ட்)ச்சி' களிடம்
அடைக்கலம் தேடுகிறார்கள்

'முடி'(வி)இல்லாது
'இடி'க்கும் பிரச்சினைக்கும்
எப்ப தீர்வு வரும்.
'அடி' மனசு
அப்பப்ப கேட்கும்.

அப்பச்சி ஒருவரால்தான்
அப்ப அழுத்கமயில்
இடி விழுந்ததென்று
அடி கொடுத்தனுப்பினோம்
அவரை வீட்டுக்கு.
அப்பச்சி போன பின்னும்
ஆங்காங்கே இடிப்பதால்
இப்பச் சீ என்று போயிற்று.
இருந்தாலும் ஒப்பீட்டில்
இது பரவாயில்லை.

ஆச்சிப் பொம்புள
அள்ளாஹ்வுக்குப் பயந்தவ.
அடைக்கலம் தேடிய பிள்ளையை
அரவணைத்து சொன்னா.
ஆட்சி மாறுவதால்
காட்சி மாறாது.
மீட்சி வேண்டுமென்றால்
மேலான அள்ளாஹ்வுக்கு
அடி பணிந்து வாழ்
விடை வரும் பிரச்சினைக்கு

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.