(அஸ்லம் எஸ்.மௌலானா)
இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவின் ஓர் அங்கமாக நேற்று சனிக்கிழமை இரவு மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கவிஞர் திலகம் எம்.எச்.எம்.அஷ்ரப் அரங்கில் கவிஞர் ரவூப் ஹக்கீம் தலைமையில் புதுமைக் கவியரங்கம் ஒன்று நடைபெற்றது.
‘மூத்த கவிஞர்களின் முத்தெடுத்து..’ எனும் கருப்பொருளில் மறைந்த எட்டு மூத்த கவிஞர்களான அண்ணல், புலவர்மணி ஆ.மு.ஷரீபுதீன், புரட்சிக் கமால், அப்துல் காதர் லெப்பை, அன்பு முகைதீன், பாவலர் பஷீல் காரியப்பர், எம்.எச்.எம்.ஷம்ஸ், யுவன் ஆகியோரை அடியொற்றி கவிஞர்களான கிண்ணியா சபருள்ளா, எஸ்.நளீம், மருதமுனை ஹஸன், நவாஸ் சௌபி, நபீல், முல்லை முஸ்ரிபா, தவம், எஸ்.ஜனூஸ் ஆகியோர் கவி பாடினர்.






