BCAS மட்டக்களப்பு மற்றும் கல்முனை வளாக சட்டத்துறை மாணவர்களுக்கிடையில் இன்று (27.11.2016) விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு BCAS வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விவாதப் போட்டியில் நடுவர்களாக கொழும்பு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் MAM ஹக்கீம், சிரேஷ்ட சட்டத்தரணி P பிரேம்நாத் மற்றும் முன்னாள் நீதிபதி ALA கபூர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் மரண தண்டணை ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? (Death penalty should be abolished in Srilanka. Yes or no) ஏன்ற தலைப்பில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்விவாதத்தில் மட்டக்களப்பு வளாகம் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.










