GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் கை வைப்பதை எதிர்த்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 03.11.2016 (வியாழக் கிழமை) நடைபெறவுள்ளது. SLTJ தலைமையகத்திலிருந்து சரியாக 01.00 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி கொழும்பு, கோட்டை, புகையிரத நிலையம் வரை செல்வதுடன், புகையிரத நிலையத்திற்கு முன்பதாக கண்டன உரை ஆற்றப்படும். - பறிக்கப்படும் உரிமையை காத்திட அலை கடலென ஆர்ப்பரிக்க வருமாறு அனைவரையும் அழைக்கிறது.
-ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ

