இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் விஷேட சொற்பொழிவு..

Written By avathani Media Network on Monday, October 31, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், நவம்பர் மாதத்துக்கான சொற்பொழிவு 1ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு 'ஆரோக்கிய வாழ்வு: சில வழிகாட்டல்கள்' எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.

இல. 77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, பிரபல வைத்தியரும், தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளருமாகிய கலாநிதி ரியாஸ் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதோடு, காலத்துக்குத்தேவையான தொனிப்பொருளில் இடம்பெறும் இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகளுக்கு: 0766529128
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.