“உலக அரங்கில் நீங்கள் யார்..?” இணைய பதிப்பு வெளியிடப்பட்டது.
மக்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களையும் சாதனைகள் படைக்க தூண்டும் விதமாக, அண்மையில் முஹாசபா நெட்வேர்க் யினால் “உலக அரங்கில் நீங்கள் யார்..?” என்ற நிகழ்ச்சி காத்தான்குடி ஹிஸபுல்லாஹ் மண்டபத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தன்னம்பிக்கை மஸாகி அவர்களால் வடிவமைக்கப்பட்டு, சுமார் 5 மணி நேரம் பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் இந் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர்களின் நன்மை கருதி,
அதனுடைய பெண்களுக்கான அமர்வின் இணைய பதிப்பு சுமார் 2 மணி நேரங்களை கொண்ட வீடியோ முதற்கட்டமாக தற்போது YouTube யில் பின்வரும் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
மஸாகி அவர்களின் முதலாவது தன்னம்பிக்கை நிகழ்ச்சி ஆகிய இதை நீங்களும் பார்வையிட்டு, உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி – இதுபோன்ற அறிவுபூர்வமான நிகழ்வுகள் எமது சமூகத்தில் மென்மேலும் இடம்பெற ஊக்குவிப்போம்.
தகவல் - முஹாசபா நெட்வேர்க்

