பங்களாதேஷ் டாக்காவில் ஓக்டோபர் 22-23 ஆம் திகதியில் அவாமி லீக் கட்சியின் இருபதாவது மாநாட்டு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு எமது நாட்டின் பிரதிநிதியாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் தறை அமைச்சர் எம். ஏச். ஏ. ஹலீம் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற ஜயசுந்தர, தமிழ் கூட்டமைப்பு சார்ப்பாக பாராளுன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீ கந்தராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் அமைச்சரின் ஹலீமின் பொதுசன தொடர்பு அதிகாரி பி. எம். ஜீ. எம். ஆர். மலீக் அவர்களும் கூட சென்றிருந்தார்.
வெகு விமர்சையாக இடம்பெற்ற இம்மாநாட்டில் 28 நாடுகளிலிருந்து அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இங்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு விருந்தினர்களுக்கு உயர் உபசரிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் எமது நாட்டை முக்கியப்படுத்தி வாழ்த்துரை நிகழ்த்துவதற்காக எமது நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்ப்பாக கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் தறை அமைச்சர் எம். ஏச். ஏ. ஹலீம் உரையாற்ற இடமளிக்கப்பட்டது.
அமைச்சரது உரை அந்நாட்டுப் நாட்டுப் பிரதமர் உட்பட அனைத்து தரனப்பினருடைய கவனத்தைப் பெற்றதாக அமைந்தது.
பங்களாதேஷ் நாட்டு அவாமி லீக் கட்சியின் வளர்ச்சிப் பாதைகளையும் சாவால்களையும் மிக ஆழ அகலமாக ஆராய்ந்து மிகுந்த அவதானத்துடனும் ஆதாரத்துடனும் கருத்துக்களை முன் வைத்து அங்கு அமைச்சர் ஹலீம் உரை நிகழ்த்தினார்.
இறுதி நிகழ்வில் பின்னர் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியின் தலைவியும் அந்நாட்டின் பிரதமருமான ஷேக் ஹசினாவுக்கும் அமைச்சர் ஹலீமிக்குமிடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இலங்கை முஸ்லிம்களுடைய நிலை குறித்தும் முஸ்லிம்களுடைய கல்வி தொடர்பாகவும் பிரதமர் ஹசீனாவிடம் விளமளித்தார். இதற்கு இணங்க தம் சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களின் கல்வி நலன் கருதி பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி உதவிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு கொள்கை அளவில் உறுதி மொழிபகிர்ந்தார்.
அமைச்சர் ஹலீம் அவர்கள் பிரதமர் ஹசீனாவுடனான சந்திப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பு எமது முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவ முன்வந்த விடயமாக உயர்ந்து நிற்கிறது.
இந்த நிழ்வில் அமைச்சர் ஹலீம் உரையாற்றும் போது
சுhதாரண குடி மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் பங்காளி மொழி பாதுக்காப்புக்கான போராட்டமும் பங்களாதேஷ. ஆவாமி லீன் எனும் கட்சி தோன்றுவதற்கான காரணமாக அமைந்நது. இன்று இந்த நாடு மக்களின் அரசியல், கொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதில் வெற்றி கண்டுள்ளது என்று அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
எமது நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எமது நாட்டுப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் பங்களாதேஷ் மக்களுக்கும் அதன் தலைவிக்கும் நன்றியையும் நல்வாழ்த்துக்களையும் இந்த விழா வெற்றியடையவும் தெரிவித்ததாக கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்சி ஜனநாயகத்தை கட்டிக் காப்பத்திலும் குறிக்கோள்களை நிறைவேற்றுவதிலும் பல தியாகங்களுக்கு மத்தியில் 1949 ஆம் வரடுத்தில் இருந்தே வெற்றி கண்டுள்ளது. இந்தவேளையில் கட்சியின் இஸ்தாபகரான ஷேக் முஜிபுர்ரஹ்மான் அவர்களும் அவர்களது குடும்பத்தின் அநேகமான உறுப்பினர்களின் உயிர் தியாகத்தையும் நாங்கள் மறந்து விட முடியாது. அதேவெளை அடக்குமுறை அடக்குறைகள், போர்க் குற்றம் இனப்படுகொலைகள் போன்ற அனர்த்தங்களையும் மக்கள் சந்தித்து இருக்கின்றார்கள். 2004 ஆம் நடைபெற்ற தாக்குதலில் முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டதும் பிரதமர் ஷேக் ஹசீனா உயிர் தப்பியதும் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றன. இந்த நாடு உலகில் அதிக மக்கள் தொகை மக்கள் நாடுகளில் 8 வதுட இடத்தில் உள்ளது. ஆசியாவில் 5வது இடத்திலும் உலகில் அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் 3 வது இடத்திலும் உள்ளது. பொருதார வளாச்சி மற்றும் ஒப்புமை ஸ்திரத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதாரம் , கல்வி, மற்றும் உணவு உற்பத்தி உட்பட குறிப்பிடத்தக்க மனித வளர்ச்சி முன்னேற்றம் கண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒப்புமை ஸ்திரத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் இரண்டு நாடுகளுமே ஜனநாயக சுதந்திம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு போராடி வருகின்றன நாடுகளுமே ஜனநாயகம் சுதந்திரம் மற்றும் நிலையான வளாச்சிக்கு போராடியுள்ளோம்
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வெற்றியும் அதன் பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி பெற்ற வெற்றியும் அமைதியான சூழலை வழிவகுத்ததுடன் நாட்டின் பெரும்பான்மை சமூகத்துடன் சிறுபான்மை சமூகங்கள் சகவாழ்வுடனட வாழ வழிவகுத்தது. நாங்கள் எதிர்கட்சி ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்ததன் மூலம் வேறுபாடுகள் இல்லாமல் ஒரு நல்லாட்சியை அமைத்து வெற்றியும் கண்டுள்ளோம்.
நான் எனது நாட்டின் பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநித்துவப்படுத்துகின்றேன். 1946 ஆம் ஆண்டு நம் நாட்டின் தந்தை என அழைக்கப்படும் டான் ஸ்டீபன் சேனநாயக்கவினால் சகல இன மக்களுடன் காலனித்துவ ஆட்சியாளர்கள் இருந்து சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களுடன் ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் பல்வேறு இன சமூகங்கள் சம உரிமைகள் என்ற கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்களாதேஷ அவாமி லீக் இரு கட்சிகளும் தங்கள் மக்களின் சமூக, பொருளாதார சுந்திரத்தை அடைவதற்கான இறுதிக் குறிக்கோளை வெற்றியுடன் எதிநோக்கி அந்த இலக்கை அடைந்துள்ளது.
நமது இரண்டு நாடுகளும் சமாதானம், ஜனநாயகம், பொருளாதாரம் வளர்ச்சி செழிப்பான எதிர்காலத்தை நோக்கிய பாதையில் செல்கின்றது. பங்களாதேஷ. ஆவாமி லீக் கட்சியின் ஊடாக நாட்டு மக்கள் எல்லாத் துறைகளிலும் செழிப்புடன் அதன் இலக்கை அடையும் என எதிர்பார்க்கின்றேன். இந்த நாடு பிரதமர் ஹசீனாவின் தலைமையின் கீழ் இந்த நாடு முன்னேற்றப் பாதையில் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. என்று அமைச்சர் அங்கு உரை நிகழ்த்தினார்.
இந்த மாநாடு நாட்டில் பூட்டான், இத்தாலி, கனடா, ஒஸ்ட்ரீயா, நேபாளம், அயர்லாந்து உள்ளிட்ட 28 நாடுகளின் பிரதான அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதமர் ஷேகு ஹசீனா அமைச்சர் ஹலிமுக்கு ஞாபகார்த்தமாக விசேட விருதும் வழங்கி கௌரவித்தார் என்பது முக்கிய அம்சமாகும்.
.












