வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவினால் முன் வைக்கப்பட்ட குறை நிரப்புப் பிரேரணை நவம்பர் மாதம் முதலாம் திகதி

Written By avathani Media Network on Monday, October 31, 2016

(இக்பால் அலி)

வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவினால் குருநாகல் மாவட்டத்தில் காபட் இடும் புனர்நிர்மாணப் பணிகளுக்காக மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 340.2 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளும் வகையில் முன் வைக்கப்பட்ட குறை நிரப்புப் பிரேரணை நவம்பர் மாதம் முதலாம் திகதி சபையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தக் குறை நிரப்புப் பிரேரணையை குருநாகல் மாவட்ட மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிதி ஒதுக்கீடு குருநாகல் மாவட்டத்திலுள்ள மூன்று வீதிகளை புனர் நிர்மாணம் செய்வதற்காக நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாகாண அமைச்சின் ஊடாக அந்த நிதியைப் பெற்று இதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்ப்படவுள்ளது. இந்த குறைநிரப்புப் பிரேரணை தோல்வியடையும் பட்சத்தில் காபட் வீதிகளுக்கான வேலைகள் தடைப்பட சந்தர்ப்பங்கள் உள்ளகதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த மாதம் செப்படம்பர் இறுதியில் வடமேல் மாகாணத்திலுள்ள குளங்களை புனர் நிர்மாணம் செய்வதற்காக வடமேல் மாகாண அபிவிருத்தி உள் நாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சர் எஸ் பி. நாவின்னவினால் 480 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து வடமேல் மாகாண சபையில் குறை நிரப்புப் பிரேரணை முன்வைக்கப்பட்டு தோல்வி யடைந்தது என்பது முக்கியமான விடயமாகும். 

ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களைத் தவிர ஏனைய கட்சிகளின் மாகாண சபை உறுப்பினர் ஆதரவு அளிக்காமையினால் முன்வைக்கப்பட்ட குறை நிரப்புப் பிரேரணை தோல்வியடைந்தது. இதனால் இம்மாவட்டத்திலுள்ள குளங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளது.

இந்த நிலைமை அமைச்சர் ரவூப் ஹக்கிமினால் காபட் வீதிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தடைப்பட சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைத் திட்டம் தடைப்படும் பட்சத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தம் பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளனர். ஆனாலும் மஹிந்த தரப்பு ஆதரவாளர்களும், ஸ்ரீ சு. கட்சி ஆதரவாளர்களும் , மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் சரத் பென்சேகா கட்சி ஆதரவாளர் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களிக்க வேண்டும். இதற்கு மாறாக இந்தப் பிரேரணை தோல்வியடையுமானால் காபட் வீதிகளுக்கான வேலைகள் தடைப்பட்டு விடும்.

எனவே அமைச்சர் நாவின்னவுக்கு ஏற்பட்ட நிலை வட மேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவுக்கு ஏற்படும் பட்சத்தில் அவர் ராஜினாமாச் செய்வரா என்று கேள்வி எல்லோருக்கு மத்தியிலும் எழுந்துள்ளது.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.