மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் அவர்களின் கருத்துக்கள் தொடர்பில் எனது மறுப்பறிக்கையினை பிரசுரிகாமைக்கான சரியான காரணத்தை அறிந்து கொள்ளல்

Written By avathani Media Network on Sunday, October 23, 2016






தலைவர் / செயலாளர்

Kattankudy Media Forum

2016.10.23

மதிப்புக்குரிய சகோதரருக்கு ,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் அவர்களின் கருத்துக்கள் தொடர்பில் எனது மறுப்பறிக்கையினை பிரசுரிகாமைக்கான சரியான காரணத்தை அறிந்து கொள்ளல்

மேற்படி விடயம் தொடர்பாக,


கடந்த 2016.10.04 ம் திகதிய www.kkytimes.lk இணையதளத்தின் http://www.kkytimes.lk/local-news/2016/10/04/38906 செய்தி மற்றும் , www.zajilnews.lk இணையதளத்தின் http://www.zajilnews.lk/49683 செய்தி ஆகியவற்றில் வெளிவந்த மாகாண சபைஉறுப்பினர் சிப்லி பாருக் அவர்களின் சில கருத்துகளுக்கு எனது மறுப்பினை தெரிவிக்கும் வகையில் நான் மறுப்பறிக்கை ஒன்றினை சில இணையதளங்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். www.avathani.com, www.kalkudahnation.com,www.srilankamuslims.lk ஆகிய இணையதளங்கள் பின்வரும் இணைப்புக்களினூடாக பிரசுரித்திருந்தன. //http://www.avathani.com/2016/10/nfgg_7.html , http://kalkudahnation.com/53814 , http://srilankamuslims.lk/சிப்லி-பாறுக்கின்-கருத்த// அதற்காக குறித்த மூன்று இணையதளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் காத்தன்குடியினை மையப்படுத்தி இயங்கி வரும் www.kkytimes.lk , www.zajilnews.lk ஆகிய இணையதளங்கள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் அவர்களின் கருத்துகளை பிரசுரித்திருந்தும் , எனது மறுப்பறிக்கையினை பிரசுரிக்கவில்லை. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் வகையில் , www.kkytimes.lk நிருவாகிகளில் ஒருவரான சகோதரர் ஹலீம் அவர்களை தொடர்பு கொண்டு வினவினேன். இதன்போது சகோதரர் ஹலீம் அவர்கள் ‘தனிப்பட்ட விமர்சனங்களை பிரசுரிப்பதில்லை என குறிப்பிட்டார்” இந்த பதில் என்னைப் பொறுத்தளவில் பொருத்தமான பதிலாக தெரியவில்லை. அடுத்து www.zajilnews.lk நிருவாகியான சகோதரர் பஸால் அவர்களை தொடர்பு கொண்டு வினவினேன். அதற்கு அவர் “ உங்களது செய்தி பிரசுரிக்காமைக்கு ஒரேயொரு காரணமே உண்டு “ எனக் குறிப்பிட்டார். மீண்டும் வினவியபோது “அதை சொல்வதில் தயக்கம் இல்லை. ஆனால் அது பின்னர் பிழையாக சித்தரிக்கப்படுமோ என யோசித்ததால்தான் உங்களுக்கு பதில் அனுப்பவில்லை.” எனக் குறிப்பிட்டார்.


மேற்படி இரு தரப்பினரும் சொன்ன பதில்கள் எனக்கு பொருத்தமானதாக தெரியவில்லை. அத்தோடு ஒருவர் பிழையான கருத்துகளை சொல்லுகின்ற போது அதனை ஆதார பூர்வமாக மறுப்பதற்கான “ Right to reply ” ஊடக உரிமையினை மறுப்பதாகவே நான் பார்க்கிறேன்.

ஒரு சமூகத்தினை பிழையாக வழி நடாத்தும் அரசியல் வாதிகளின் கருத்துக்களை பகிரங்கமாக சொந்த முகவரியோடு ஆதார பூர்வமாக மறுக்கின்ற போது, அதனை பிரசுரித்து மக்களுக்கு சரியான கருத்துகளை கொண்டு சேர்ப்பது பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பணியாகும். காத்தான்குடி ஊடகங்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படும் அமைப்பு என்ற வகையில் தங்கள் அமைப்பூடாக இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாஹ் எமது தூய எண்ணங்களை அங்கீகரிப்பானாக, ஆமீன்...

இவ்வண்ணம்

உண்மையுள்ள சகோதரன் ,

அ.அ முகம்மது ஜுமானி


குறிப்பு:

இக்கடிதமானது பின்வரும் ஒழுங்கில் எனது மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

To:


CC:

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.