ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை சிலர் திசை திருப்ப முற்படுவதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும், இராணுவ புலனாய்வு அதிகாரி, எழுதி வைத்துள்ள கடிதத்தில் குறித்த கொலையை தானே செய்ததாக கூறியுள்ளார்.
எனினும், விசாரணைகளில் குறித்த இராணுவ அதிகாரி அன்றையதினம் கொழும்பில் இருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

