பொத்துவில் நகரில் இடம்பெற்ற பொலிஸ் தினக் கொண்டாட்டம்.

Written By avathani Media Network on Thursday, September 8, 2016

(மரியமின் புத்திரன்)

கிழக்குவான் ஊடக வலையமைப்பு, அறுகம்பை ஆட்டோ உரிமையாளர் சங்கம், பொலிஸ் சிவில் பாதுகாப்புக் குழு அனுசரனையில் “யு வன்” மக்கள் சேவை மன்றம் ஏற்பாடுசெய்த பொலிஸ் தினக் கொண்டாட்டம் பொத்துவில் களப்புக்கட்டு சிறுவர் பூங்காவில் அன்மையில் இடம்பெற்றது.​

பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி G.U.வசந்த குமார, அறுகம்பை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி S.G.L.ஜயதிலக ஆகியோர் பிரன்னமாகியிருந்த விழா பொத்துவில் மத்திய கல்லூரி மாணவர்களின் பேன்ட் வாத்திய மரியாதையுடன் ஆரம்பமாகியது. கொட்டும் மழையிலும் பொதுமக்கள் முன்னிலையில் வெகுசிறப்பாக நடைபெற்ற பொலிஸ் தினக் கொண்டாட்டத்திற்கு பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் N.M.முஸர்ரத் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

அறுகம்பை ரோயல் கிண்டர் காடர்ன் முன்பள்ளி மாணவர்களின் வினோத உடைப் போட்டியுடன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்ற நிகழ்வில் யு வன் மக்கள் சேவை மன்றத்தினால் நூற்றி இரண்டு மானவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் நூறு தென்னங்கன்றுகள் மற்றும் பத்துப்பேருக்கான குடிசைக் கைத்தொழில் உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

தாறுல் பலாஹ் வித்தியாலய மாணவன் செல்வன்- அப்துல் மலிக் அப்துர் ரஹ்மான் நிகழ்திய பொலிஸ் தின சிறப்புப் பேச்சு அனைவரினதும் கவணத்தை ஈர்க்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனதுரையில் பாராட்டிப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.