பாணந்துறையில் ஹஜ் பெருநாள் விசேட கவியரங்கு

Written By avathani Media Network on Thursday, September 8, 2016


(எம்.எஸ்.எம். சாஹிர்)

ஹஜ் பெருநாளை முன்னிட்டு அல் - பஹ்ரியா கவி மன்றத்தின் ஏற்பாட்டில் “யாரைத்தான் நம்புவதோ” எனும் தலைப்பில் அமைந்த விசேட கவியரங்கு எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு பாணந்துறை தொட்டவத்தை அல் - பஹ்ரியா மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

“கலாஜோதி” காத்தான்குடி பௌஸ் மௌலவி தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கில், பாணந்துறை நிஸ்வான், மேமன் கவி, கிண்ணியா அமீர் அலி, யாழ். அஸீம், போருதொட்ட றிஸ்மி, கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் ஆகியோர் கவிதைப் பொழிவு நிகழ்த்தவுள்ளனர். 

இந்நிகழ்வில் காவ்யபிமானி கலைவாதி கலீல் விசேட உரை ஆற்றவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.