முன்னாள் தவிசாரைத் தாக்கியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு​

Written By avathani Media Network on Thursday, September 8, 2016


(மரியமின் புத்திரன்)

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதானோரின் விளக்கமறியல் மேலும் பதின்நான்கு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.​

மதுபோதையிலிருந்த இளைஞர்கள் சிலரால் குளத்துச்சந்தி மீரா பள்ளிவாசலருகில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் இருபத்தியோராம் திகதிவரை மேலும் பதின்நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கும்படி பொத்துவில் நீதவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதி எம்.ஐ.வஹாப்தீன் உத்தரவிட்டுள்ளார். சம்பவதினம் மேலும் சிலர் குறித்த இளைஞர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.