காத்தான்குடியில் இடம்பெற்ற "ஈதுல் அல்ஹா" ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..

Written By avathani Media Network on Tuesday, September 13, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

உலக முஸ்லிம்கள் புனித “ஈதுல் அல்ஹா” ஹஜ்ஜுப் பெருநாளை இன்று திங்கட்கிழமை (12-09-2016) கொண்டாடிவருகின்ற நிலையில்.

ஈத்துல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை திறந்த வெளியில் தொழுவது நபி வழியாகும் அதனடிப்படையில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஏற்பாட்டில் இன்று காலை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாசல் திறந்த வெளியில் தொழுகை நடைபெற்றது.

ஈத்துல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும், குத்பாப் பிரசங்கத்தையும் ஏ.எஸ்.எம்.சிராஜ் (பலாஹி) நிகழ்த்தினார். இதில் பெரும் தொகையான ஆண்கள், பெண்கள் ,உலமாக்கள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.