காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் அறபா நோன்பு திறக்கும் நிகழ்வு

Written By avathani Media Network on Tuesday, September 13, 2016

(எம். எச். எம். அன்வர்)

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் (சி ஐ ஜி) துல்ஹஜ் மாத பிறை 9வது அறபா நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த 11.09.2016இடம்பெற்றது 

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாளமானோர் கலந்துகொண்டதுடன்; இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவினை அஷ்ஷெய்ஹ் எம் டி எம் சப்ரி நளீமி நிகழ்த்தினார் 

அறபா தினத்தில் முஹம்மது நபியவர்களின் இறுதிப்பேருரை அம்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் அதன்படி நாம் இத்தினத்திலிருந்து வாழ திடசங்கட்பம் கொள்ளுமாறு விஷேட சொற்பொழிவாளரால் எடுத்துரைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது  

வழமைபோன்று இவ்வாறான சுன்னத்தான நோன்பு தினங்களில் இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்து அதிகமானோரை நோன்பு பிடிக்க தூண்டுகோலாக அமையும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் செயற்பாட்டினை பலராலும் வரவேற்பதை காணமுடிகின்றது 




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.