மாபெரும் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்..

Written By avathani Media Network on Sunday, September 18, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான U.L.M.N.முபீன் BA அவர்களின் வேண்டுகோளின் பேரில் சுகாதார சுதேச வைத்தியத் துறை பிரதியமைச்சர் பைசல் காசிம் MP அவர்களின் வழிகாட்டலில் நடைபெறும் மாபெரும் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்..

19,20.09.2016 ம் திகதியில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மு.ப.9.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணி வரை இவ் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் இடம்பெறும்.

இவ் இலவச ஆயுர்வேத வைத்திய முகாமில் மனிதனை ஆட்டிப்படைக்கும் தொற்றா நோய்களான Diabetic சீனி வியாதி, உயர் குருதியமுக்கம், கொலஸ்ட்ரால், ஆஸ்துமா, வாதம்,கடுப்பு மற்றும் கண்,காது,மூக்கு போன்ற நோய்களுக்கு விஷேட சிகிச்சை அளிக்கப்படுவதோடு விஷேடமாக பஞ்சகர்ம சிகிச்சைகளும் வழங்கப்படும்.

கொரிய- இலங்கை விஷேட வைத்திய நியுணர்கள் கலந்துகொள்ளும் இவ் வைத்திய முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைக்கின்றார்கள்..

ஏற்பாட்டு..
மத்திய குழு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
காத்தான்குடி.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.