மஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா பெண்கள் மகளிர் அறபிக்கல்லூரியின் பெண்களுக்கான ஹஜ்ஜூப்பெருநாள் கலை விழா இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில்

Written By avathani Media Network on Saturday, September 17, 2016


(எம் எச் எம் அன்வர்)

முற்றிலும் பெண்களை மாத்திரம் கொண்டு மஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா பெண்கள் மகளிர் அறபிக்கல்லூரியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஊடகவியலாளர்களுடனான மாநாட்டின்போது அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம் சி எம் றிஸ்வான் மதனி தெரிவித்தார்

அதிபர் அஷ்ஷெய்ஹ் ஜெய்னுலாப்தீன் மதனி கருத்து தெரிவிக்கையில்

2011ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இம் மஹதுஸ்ஸூன்னா அறபிக்கல்லூரியானது நல்லொலுக்கமுள்ள பெண்களை உருவாக்குவது எனும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது ஒரு முன்மாதிரியான கல்லூரியாகும்

எதிர்காலத்தில் மார்க்க விடயங்களை சரியாகவிளங்கி பெண்கள் சமூகத்திற்கு சரியான விடயங்களை எடுத்துக் கூறக்கூடிய பெண்களாக அவர்கள் திகழ வேண்டும் எனத் தெரிவித்தார் 

அத்துடன் இந்த அறபிக்கல்லூரியானது கட்டடம் மற்றும் வளப்பற்றாக்குறை தேவைகளுடன் காணப்படுவதால் தனவந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் முன்வந்து இக்கல்லூரியை மேலும் அபிவிருத்தி செய்ய ஒத்துழைக்குமாறும் இதன்போது வேண்டிக்கொண்டனர் 
















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.