விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Written By avathani Media Network on Wednesday, August 10, 2016


ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மருத்துவமனையொன்றின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

பாக்தாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள யார்மூக் மருத்துவமனையில் நேற்றிரவு (09) ஏற்பட்ட இந்த தீ விபத்தினை 3 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்போது, 7 குழந்தைகளை அவர்கள் காப்பாற்றியுள்ளதுடன் 29 பெண்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தீ விபத்திற்கு மின் ஒழுக்கே காரணம் என தெரிவி்க்கப்பட்டுள்ளது.

ஒழுங்கான பராமரிப்பின்மை மற்றும் மோசமான மின் கம்பியிடல் காரணமாக ஈராக்கில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.