2016 அரச புகைப்பட விருது விழா மற்றும் கண்காட்சி

Written By avathani Media Network on Thursday, August 11, 2016


உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்கின்ற 2016 அரச புகைப்பட விருது விழா மற்றும் கண்காட்சி 2016 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு அபேகம பிரதேச மகாவளவ்வ மண்டபத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கை புகைப்படக் கலைக்கு உன்னத சேவையாற்றியமைக்காக பிரபல புகைப்படக் கலைஞர் எல்.எச்.ஆர். விஜேயதுங்க அவர்களுக்கு “புகைப்பட அபிமானி” என்ற வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படவுள்ளது.

உன்னத புகைப்படக் கலையை வளர்பதற்கும் அதன் செயற்பாடுகளை விரிவடையச் செய்வதற்கும் மற்றும் அரச மட்டத்தில் புகைப்படக் கலைஞர்களை கௌரவிப்பதுமே உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச புகைப்பட ஆலோசனைக் குழுவின் முக்கிய நோக்கமாகும். 

வாழ்க்கை முறை மற்றும் கலாசார பிரிவு, இயற்கை நிகழ்வுகள், மற்றும் பூமி, வனவிலங்குகள், தொலைதொடர்பு, விளையாட்டு, செய்தி, திருமண நிகழ்வு மற்றும் திறந்த பிரிவு என 5 பிரிவுகளில் போட்டி நடைபெற்று 3000 இற்கும் மேற்பட்ட ஆக்கங்கள் கிடைக்கப்பெற்று அதிலிருந்து முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் திறமை விருது உட்பட 10 விருதுகள் மற்றும் 65 சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

2016 அரச புகைப்பட விருது விழாவின்போது தெரிவுசெய்யப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி ஆகஸ்ட் மாதம் 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதன்போது உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன பிரதி அமைச்சர் கௌரவ பாலித தெவரப்பெரும உட்பட அதிதிகள் பங்குபறற்றவுள்ளனர்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.