(நிந்தவூர் - முஹம்மட் ஜெலீல்)
நிந்தவூர் 20ம்,பிரிவு சிவ முத்துமாரியம்மன் ஆலைய நிர்வாகத்தினால் ஏற்பாட்டில் கிராம சேவை உத்தியோகத்தர் "அஸத்துல்லாஹ( றசூல் G.S) அவர்களின் தலைமையில் நிந்தவூர் MOH காரியாலயத்தினால் இன்று 29-07-2017 நிந்தவூர்-20ம்,பிரிவில் பொது மக்களுக்கான இலவச குளஸ்ரோல் மற்றும் சீனி போன்ற நோய்களுக்கான இரத்த பரிசோதனை மற்றும் புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நிந்தவூர்-20ம், பிரிவிலுள்ள பொதுமக்களும் ஏனைய பிரிவிலுள்ள மக்களும் எராளமானோர் கலந்துகொண்டனர்.
இன்நிகழ்வுக்கு நிந்தவூர் சிவ முத்துமாரியம்மன் ஆலைய அமைப்பினர் அனுசரணை வழங்கியதோடு இந்நிகழ்வை சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு பலன் தரக்கூடிய வகையில் ஏற்பாடும் செய்திருந்தனர்.
மேலும் எமது நிந்தவூர் பிரதேசத்தில் இதுபோன்ற அதிகளவான சமூக சேவைகளில் எமது கிராம சேவை உத்தியோகத்தரான "அஸத்துல்லாஹ (றசூல் G.S) அவர்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றதோடு இது போன்று நிகழ்வுகளை ஏனைய உத்தியோகத்தர்களும் எமது மக்களின் நலனுக்காக இது போன்ற சமூக சேவைகளில் ஈடுபட வேண்டுமென்பது மக்களின் எதிர்பர்ப்பாகும்.






