முச்சக்கரவண்டி மஞ்சந்தொடுவாயில் விபத்து.

Written By avathani Media Network on Sunday, June 12, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி இன்று காலை 12.06.2016 விபத்துக்குள்ளானது.

மட்டக்களப்பு போதனா வைத்தாயசாலைக்கு உறவினரை பார்வையிடச் சென்று காத்தான்குடிக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே வேகக்கட்டுப்பாட்டை இழந்து நித்திரை காரணமாக மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றதாக விபத்துக்குள்ளானோர் தெரிவித்தனர்.

சிறு காயங்களுக்குள்ளான நிலையில் முச்சக்ரவண்டியில் பயணம் செய்தவர்கள் மூவரும் வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.