(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடியில் இயங்கி வரும் முஹாசபா மீடியா நெட்வொர்க் தனது சமூகப் பணியின் ஒரு அங்கமாக புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது..
தற்காலம் முஸ்லிம்களின் புனித மாதமாகிய ரமலான் காலம் இதில் முஸ்லிம்கள் "ஹராம்" ஆக்கப்பட்ட விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கு பயிற்சி அளிக்கும் மாதமாகவே கருதப்படுகிறது..
எனவே அதனை கருத்திற்கொண்டு புகைப்பிடிப்பது "ஹராம்" எனும் தலைப்பில் "நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கிறான்.(அல் குர் ஆன் 4:29) என்ற குர் ஆன் வசனங்களும் உள்ளடங்கிய ஸ்டீகர்கர்கள் பொது இடங்களிலும், உணவு வியாபார நிலையங்களிலும்(ஹோட்டல்), வீதியோர உணவகங்களிலும் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டது..
இது போன்ற காலத்திற்கு தகுந்த விழிப்புணர்வு செயற்பாடுகள் இம் முஹாசபா சமூக அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





