கிழக்கு முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

Written By avathani Media Network on Tuesday, June 7, 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
சட்டத்தரணி பி.லியனஆராய்ச்சியினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் சம்பூர் பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கடற்படை வீரர் ஒருவரை கடும் சொற்களால் திட்டினார். 

இந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.