மாலைத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Written By avathani Media Network on Tuesday, June 7, 2016


துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறி மாலைத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு யாமீன் அப்துல் கயூம் அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 4 ஆவது மிக முக்கிய அரசியல் தலைவர் அதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முகமது நசிம் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஷேக் இம்ரான் அப்துல்லா ஆகிய 3 பேருக்கு ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் நஷீத் மட்டும் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். மற்றவர்கள் மாலியில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அதீப் மீது அந்நாட்டு அதிபர் கயுமைக் கொல்ல முயன்றதாக மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.