சலாவ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாய்க் கிழமை இழப்பீடு வழங்கப்படும்

Written By avathani Media Network on Saturday, June 11, 2016


கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இழப்பீடு வழங்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது. 


வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை கணக்கிடும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும், அந்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இதற்காக 76 அரச அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 

அந்த அறிக்கை திங்கட்கிழமை பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்ட பின்னர் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். 

இது தவிர அனர்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்காக 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

அந்த ஒவ்வொரு குழுவிலும் பிரதேச அபிவிருத்தி அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரி, மற்றும் சிவில் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் பிரதேசத்தில் உள்ள 654 கட்டிடங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.