(மாவத்தகம தினகரன் நிருபர்)
இந்நாட்டின் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மண்சரிவுக்கு உட்டு கணிசமாளவுக்கு மனித உயிர்களை காவு கொண்ட அரநாயக்கப் பகுதில் ராஜகிரி விஹாரையில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி மக்களுக்கு சிவன் பவன்டேசன் அமைப்பினால் நிவாரண உதவிகள் 19-05-2016 வழங்கி வைக்கப்பட்டது.
இந்த அகதி முகாமுக்கு அரிசி, சீனி, பருப்பு, சவர்க்காரம், பற்பசை, பல் துளக்கும், பிஸ்கட் உள்ளிட்ட பல கணிசமானளவு அத்தியவசியமான நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
ராஜகிரி விஹாரையிலுள்ள முகாமுக்குப் பொறுப்பாகவுள்ள ஆனந்த தேரர் அவர்களிடம் சிவன் பவன்டேசன் அமைப்பின் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதம் நிவாரணப் பொருட்களை கையளித்தார்.
பின்னர் முகாமைப் பார்வையிட்டதோடு அங்கு என்ன அத்தியவசியமான பொருட்கள் தேவைப்பாடு உள்ளது என கணேஷ்வரன் வேலாயுதம் ஆனந்த தேரரிடம் வினவிய போது 350 பேர்களுக்கு 4 மலசல கூடம் மட்டும் தான் அமைந்துள்ளன. போதியளவு சமாளித்துக் கொள்ள முடியாது எனவும் அதேவேளை தண்ணீர் வசதிகள் போதாது எனவும் ஆனந்த தேரர் சுட்டிக் காட்டினார்.
தற்காலிக மலசல கூட வசதியை அமைப்பதற்கும் மற்றும் தண்ணீர் வசதியைப் பெற்றுக் கொள்ள தாங்கிகள் தந்துதவத் தயராகவுள்ளதாகவும் கணேஷ்வரன் வேலாயுதம் உறுதிப்படக் கூறியதோடு தேiயான உதவிகளைச் செய்யத் தயராக இருப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
இக்பால் அலி
