சிறப்பாக நடைபெற்ற மாதர் சங்க ரமலான் மலிவு விற்பனை!

Written By avathani Media Network on Friday, May 20, 2016


(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்) 

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்த 'ரமலான் மலிவு விற்பனை 2016' (14ஆம் திகதி சனிக்கிழமை ) தெஹிவலை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது

இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தலைவி தேசமான்ய ஹாஜியானி மக்கியா முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கைக்கான மலேசிய தூதுவரின் பாரியாரான திருமதி வொன் ஸெய்தி அப்துல்லாஹ்வும், இளம் மாதர்களின் முஸ்லிம் சங்க போஷகரான ஹாலிதா சஹாப்தீன் ,அகில இலங்கை வைஎம்எம்ஏ பேரவையின் முன்னாள் தலைவர் காலித் பாரூக் ,திருமதி மசாரா ஜாபீர் ,சங்கத்தின் செயலாளரான தேசமான்ய மர்ளியா சித்தீக் ,பொருளாரான தேசமான்ய பவாஸா தாஹா உட்பட பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தின் அனுசரனையுடன் இளம் யுவதிகளுக்காக நடத்தப்பட்ட தையல் வகுப்பில் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு மலேசிய தூதுவரின் பாரியாரான திருமதி வொன் ஸெய்தி அப்துல்லாஹ்வின் கரங்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

இந்த மலிவுச் சந்தையில் சுமார் 64 விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 

(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்) 

(ஊடக இணைப்பாளர்- வை.டப்.எம்.ஏ)












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.