தற்போது காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்த வங்கி ஆரம்பித்ததை முன்னிட்டும் வைத்தியசாலையில் தற்போது காணப்பட்டுவரும் இரத்தப் பாற்றாக்குறையை நிவரத்தி செய்யும் நோக்குடனும் காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஓர் அங்கமாக காணப்படும் (சமூக சேவைப்பிரிவி)ன் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்...
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (01.05.2016) மே மாதம் முதலாம் திகதி காலை 08.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இவ் இரத்தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனவே இவ் மனித நேயம் பேனும் இவ் இரத்ததான முகாமில் தாங்கள் அனைவரும் வருகைதந்து உங்களுடைய இரத்தத்தினை தானமாக வழங்கிச் செல்லுங்கள்.
அல்லாஹ் அவனுடைய திருமறையில் கூறுவதாவது,
'எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்' (அல்குர்ஆன். 5:32)
இரத்ததானம் பற்றி சில தகவல்கள்...
01. நமது உடலில் 5 லீற்றர் முதல் 6 லீற்றர் வரை இரத்தம் ஓடுகிறது.
02. இரத்ததானம் செய்யும் போது ஒரு யூனிட் இரத்தமே எடுக்கப்படுகின்றது. (ஓருயூனிட் என்பது 350 மி.லி. ஆகும்)
03. இரத்ததானம் செய்வதற்கு முன் நமது உடலை கைதேர்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.
04. இரத்ததானம் செய்வதற்கு அதிகபட்சம் 15 நிமிடங்களே செலவாகும்.
05. இரத்ததானம் செய்த உடனேயே அல்லது சில நிமிடங்களிலேயே வழக்கமான பணிகளை செய்ய ஆரம்பித்துவிடலாம்.
06. தானம் செய்த இரத்தம் சுமார் 48 மணி நேரத்திற்குள்ளேயே புது இரத்தமாக உற்பத்தி ஆகிவிடும்.
07. நாம் வழங்கும் இரத்தம் உயிர்காக்க மட்டுமே உதவுகின்றது.

