மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் 19 ஆவது அமர்வு.

Written By avathani Media Network on Friday, April 22, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் பெளணமி நிகழ்வின் 19 ஆவது அமர்வாக மட்டக்களப்பு மாநாகர சபையின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன் எழுதிய நுண்ணறிவு நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை (21) நகர மண்டபத்தில் நடைபெற்றது.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் வி. மைக்கல் கொலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் முதல் பிரதியை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் பிரதி ஆணையாளரின் தந்தைக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.

மூளையின் தொடர்பயிற்சி ஊடாக அறிவை வளர்ப்பதுதான் நுண்ணறிவாகும் இது பரீட்சை எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல சமய, கலை ,இலக்கியவாதிகளுக்கு மட்டுமன்றி வாழ்க்கையில் சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஒவ்வோருவரும் பிரச்சினைகளை இலகுவாகக் கையாள வேண்டுமாயின் நுண்ணறிவை வளர்க்க முயற்சிக்க வேண்டும் என கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் நூல் விமர்சனத்தில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், மண்முனை டக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா மற்றும் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். எதிர்மன்னசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு நூலின் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.