வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவின் மறுப்பறிக்கை

Written By avathani Media Network on Thursday, April 21, 2016


(இக்பால் அலி)

அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொல்கஹவெல புகையிரத மேம்பாலம் நிர்மாணிப்பணிக்காக இந்நகரிலுள்ள பள்ளிவாசலின் காணியில் ஒரு பகுதியொன்று அகற்றப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தார்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டதே தவிர பள்ளிவாசலை உடைக்கப் போகின்றார்கள் என்று நான் என்று கூறவில்லை. இது பற்றி ஊடகவியலாளர் மிகைப்படுத்தி எழுதிய தவறான செய்தியாகும். இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு என்னை மலிப்படுத்துவது நல்ல , உவப்பான காரியமல்ல என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தெரிவித்தார்.

பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் 2279 மில்லியன் ரூபா செலவில் ஸ்பெயின் நாட்டின் நிதி உதவின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 11-04-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அங்கு கருத்துத் தொடர்பாக முகப் புத்தகங்களில் பிழையான கருத்துக்களை எழுதி வருகின்றனர். இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

இந்தச் செய்தி தொடர்பாக உண்மை நிலையை உணர்த்தி உடனுக்குடன் மறுப்பு செய்தியை குறித்த இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பபட்டிருந்த போதிலும் முன்னர் வெளியான செய்தியை வைத்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளை முகம் புத்தகங்களில் பதிவு செய்து வருவது கவலை தரும் செய்தியாகும். 

முகப் புத்தகங்களில் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடலும் விவாதங்களும் இடம்பெறுதல் வேண்டும். குறித்த நபரை ஒரு காழ்ப்புணர்ச்சி ரீதியாக தாக்குதல் விமர்சனம் செய்வதால் எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை. இதேநேரம் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவோர்கள் மறுமை நாளுக்கும் அஞ்சிக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.