(இக்பால் அலி)
இன்று உலகிலே பல தரப்பட்ட சோதனைகள் மலிந்து போய் உள்ளன. மனிதன் பக்குவம் இன்மையே இதற்குக் காரணமாகும். எல்லா இடங்களிலும் மனிதன் தம் கைகளினால் சம்பாதித்துக் கொண்ட தீமையின் காரணத்தினால் இந்தச் சோதனைகள் ஏற்படுகின்றன. இவையிலிருந்து தடுப்பதாக இருந்தால் எமது மாணவர் சமுதாயத்தை இஸ்லாமிய வட்டத்திற்குள் கொண்டு வருதல் வேண்டும். அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி
இந்த மாணவர்களை பள்ளியோடு சம்மந்தப்படுத்தி பக்குவமுள்ளவர்களாக ஆக்குவோமாயின்; எமது சமுதாயம் புத்தெழுச்சியுள்ள சமுதாயமாக மாற்றம் பெறும். இப்படிப்பட்ட சமுதாயம் தான் இந்த நாட்டிலே நிலைத்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார்.
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் முள்ளிப்பொத்தானை தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறந்து வைக்கும் வைபவம் அதிபர் எம். மன்சூர் தலைமையில் 07-04-2016 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
பல தரப்பட்ட சவால்களை எமது சமூகம் எதிர்நோக்கியுள்ளன. அந்த சவால்களை முறிடியப்பதாக இருந்தால் நாம் உண்மையான முஸ்லிம்களாக மாற வேண்டும். எங்களிடத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள் வர வேண்டும். நபி (ஸல்) அவர்களை முன்மாதரியாகக் கொண்ட நடவடிக்கைகள் வர வேண்டும். அப்போதுதான் எங்களை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். எங்களைப் பாhர்த்து மற்றவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் நாங்கள் மாற வேண்டும். எமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் நாம் முதலாவதாக முஸ்லிம்களாக வாழ வேண்டும். எம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். தம்மை தாம் திருத்திக் கொண்டு வாழ வேண்டும். தான் திருந்தினால் உலகம் தானாகவே திருந்தும் என்பார்கள்.
ஓரிறைக் கோட்பாட்டுக்கு அடுத்தபடியாக ஒரு மனிதனை உருவாக்குவதற்கு தாயின் மடி இருந்து கொண்டிருக்கிறது. ஒரு சமுதாயத்திற்கு உந்து கோளாகவும் அந்த சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்காகவும் ஒரு தாயின் மடி இருந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.
இததற்கு அடுத்வையாக நாங்கள் குடும்பத்தைப் பார்க்கின்றோம். தாயும் தந்தையும் சேர்ந்து சகோதரனும் சகோதரிகளும் சேர்ந்து உற்றார் உறவினர்களும் சேர்ந்து குழந்தையை பிரயோனசமுள்ள பிள்ளையாக வளர்த்தெடுப்பதற்கு முயற்சி செய்வதைப் பார்க்கின்றோம். இதற்கு அடுத்த படியாக எமது குழந்தையை சமுதாயத்தில் சிறந்த பிரஜையாக உருவாக்கக் கூடிய இடமாக கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அமைந்துள்ளன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தனி மனிதனை உருவாக்கம் தொடர்பாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக பள்ளிவாசல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இதனால் தான் இஸ்லாம் பள்ளிவாசல்களைக் கட்டுவதில் மிக முக்கிய கவனம் செலுத்தியுள்ளதை நாம் பார்க்கின்றோம்.
எமது சமுதாயத்தில் தனி நபர்களாக இருக்கக் கூடிய நல்ல பிரஜைகள் உருவாகுதல் வேண்டும் என நாம் எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒன்றுதான். எமது சமுதாயத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்த பணி இவைகள் தான். நபி (ஸல்) அவர்கள் செய்த பணிகளில் ஒன்றுதான் தனி மனிதனை உருக்கியவையாகும். இந்த தனி மனிதர்கள் ஒன்று சேரும் போதுதான் நல்லதொரு சிறந்த சமுதாயம் உருவாக முடியும். இந்த சமுதாயத்தினர் தான் உலகத்திலே நிலைத் திருக்க முடியும். ஒரு கட்டுக் கோப்பான சமுதாயம் உருவாக வேண்டும் என்பதை இஸ்லாம் என்றுமே வலியுறுத்தியிருப்பதை நாம் பார்க்கலாம். இந்த வகையில் ஒரு தனி மனிதனை உருவாக்குவதில் பள்ளிவாசல்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதனால் பள்ளிவாசல்கள் கட்டும் விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன.
பள்ளிவாசல்கள் கட்டுவது முதல் பள்ளிவாசல்களை கட்டுவதற்காக ஒத்துழைப்பது என்பது கூட வணக்கம் என இஸ்லாம் கூறுகின்றது. ஒரு கல்லைக் கொடுத்தாவது சரி அல்லது ஒரு தடியைக் கொடுத்தாவது சரி ஒரு பள்ளிவாசலைக் கட்டுவதற்கு பள்ளிவாசலைப் பராமரிப்பது அதில் ஒன்று தூசியைத் தட்டி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுதல் என்பவையெல்லாம் வணக்க காரியங்களாகும். மற்றுமொரு அம்சமாக பள்ளிசால்க அயாத்தாக்குவது அதாவது ஐங்காலத் தொழுகை மேற்கொள்ளல், இளைஞர்களுக்கு நல் வழிகளைக் காட்டிக் கொடுத்தல், எமது சமுதாயத்திலுள்ள தனி மனிதர்களை உருவாக்குவதற்கு இஸ்லாம் என்னென்ன வழிமுறைகளை வைத்துள்ளதோ அந்த வகையில் எம் பள்ளிசல்களை அயாத்தாக்குதல் வேண்டும்
இவ்வாறு பள்ளிசால்கள் தொடர்பாக எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் கூட பள்ளிவாசலில் இரு ரக்காத்துகள் தொழுது விட்டு இஹ்திகாப் இருந்து விட்டாலும் அது வணக்கமாகக் கருதப்படும்.
பள்ளிவாசலை எவ்வகையிலும் நோக்கினாலும் ஒரு தனிமனிதன் உருவாக்கத்திற்கு மிக முக்கிய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கின்றன.
பள்ளிவாசல்கள் கட்டுவதன் நோக்கம் எமது சமுதாயத்திலுள்ள தனி மனிதர்களை நல்ல பிரஜைகளாக உருவாக்குதற்குத்தான். மனிதனை ஒரு நல்ல மனிதனாக மாற்றக் கூடிய மிக முக்கியமான இடம்தான் பள்ளிசால்கள். அன்றைய காலத்தில் சஹாபாக்கள் எந்த விடயத்தை ஆரம்பிப்பதாக இருந்தாலும் பள்ளிவாசல்களிலிருந்துதான் ஆரம்பித்துள்ளார்கள். என்னென்ன பிரச்சினைகள் எதிர்நோக்கினார்களோ அத்தனை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய இடமாகத்தான் அவர்கள் பள்ளிவாசல்களை பயன்படுத்தியிருக்கின்றார்கள். உலகம் அழியும் வரையிலும் போற்றப்படக் கூடிய உத்தமர்கள் இந்தப் பள்ளிசால்களிலிருந்தான்; உருவாகியிருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த அபூப்பக்கர் (ரலி) அவர்கள் கூட அந்தப் பள்ளியிலிருந்துதான் உருவானார்கள்.
ஒரு மனிதனை நல்லவனாக மாற்றுவதற்கு ஒரு மனிதனை பக்குவமுள்ளவனாக ஆக்குவதற்கு பள்ளிசால்களில் பயனுள்ள விளக்கவுரைகள் வழங்கப்படுகின்றன. அல்குர்ஆனை படித்தால் தான் எங்களுக்கு மோட்சமே இருக்கிறது. இங்கே அவைகள் ஓதப்படுகின்றன.
எனவே தனி நபர்களை உருவாக்கும் இடமாக பள்ளிவாசல்கள் உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் எ. எல். கலிலுர்ரஹ்மான், அஷ்ஷெய்க் அன்சார் மதனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
