தலைமைத்துவ மோதல் குறிவைக்கும் அம்பாறை மாவட்டம்

Written By avathani Media Network on Monday, April 11, 2016


(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)

கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளினது தலைமைத்துவங்களும் பல்வேறு நிகழ்வுகளை முன்னிறுத்தி உலா வந்த கதை நாமறிந்ததே. என்றாலும் இவ்விரு கட்சிகளினது தலைமைத்துவங்களைப் பொறுத்தவரை காலூன்றலை வலிமைப்படுத்திக் கொள்ளும் இலக்கு நோக்கிய பயணம் இதற்குள் இருந்தமை மிக உறுதியான சங்கதி.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட தமது முஸ்லிம் மக்களிடம் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் தமது கட்சியின் உட்கட்டமைப்பை சக்தியுடையதாக மாற்றிக் கொள்ளும் அடிப்படையில் கிளை இயங்குதளத்தை விரிவுபடுத்தும் செயற்பாட்டையும், சதொச விற்பனை நிலையத் திறப்பு விழாக்களையும் அடிப்படையாக வைத்து அம்பாறை மாவட்டத்தில் தமது கால்களைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கு மத்தியில் மூத்த ஒலி, ஒளிபரப்பாளரும் அதிபருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஒரு நிகழ்வும் நடைபெற்றது. உண்மையில் இந்நிகழ்வு தனித்துவமாகவும் தனியாகவும் இடம்பெற்றிருக்க வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வை, மிகவும் குறைத்து மதிப்பீடு செயும் வகையில் நடந்தேறி இருப்பது ஓர் ஆரோக்கிய பக்கத்தை நோக்கிய நகர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை.

கலாபூஷணம் ஏ.பீர்முஹம்மது எழுதிய திறன்நோக்கு நூல் வெளியீட்டு வைபவத்தில் மூத்த ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் கட்சி இணைவு நிகழ்வு கனதியின்றி முடிந்து போயிற்று. இவர் சுமார் ஐநூறு பேர் அளவிலான பங்கு பற்றலுடன் பிரமாண்டமான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செது, தனது ஆளுமையை பகிரங்கப்படுத்தி, தனக்குப் பின்னாலும் பல வகையான புலமையாளர்கள் இருக்கின்றனர் என்பதை நிரூபித்து இருக்கலாம்.

நமது தேசம் தழுவிய செல்வாக்கும் அறிமுகமும் வாக்கப்பெற்ற ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் என்பது ஓர் எழுப்பான செதியாகும். இதனை சத்தமில்லாத ஒன்றாக ஆக்கிக் கொண்டமைதான் இதன் சுவாரஸ்யத்தை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. மற்றும் சதொச கிளைகளின் திறப்பு விழாக்கள் நடைபெற்றமை என்பது அவை திறக்கப்பட்ட பகுதியினர் சிலருக்கு தொழில் வாப்பினை வழங்கும் நிலையையே தோற்றுவித்திருக்கின்றது.

இந்தச் செயற்பாடு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் ஊடாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது செல்வாக்கினை உயர்த்திக் கொள்வதென்பது ஒரு கேள்விக்குறிய விடயமாகவே பார்க்க வேண்டும். ஏனெனில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு இம்மாவட்டத்தில் சுமார் 33,000 வாக்குகளை அளித்தவர்கள் இருப்புக் கொண்டுள்ளனர். இதில் தொழில்வாப்பினை எதிர்பார்த்திருப்போர்களின் எண்ணிக்கையும் ஓரளவு இருப்பது வெளிப்படையானது.

ஆயினும் இங்கு சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்ட சில பகுதிகளிலிருந்து ஒரு சிலருக்கு தொழில் வாப்பினை வழங்கிக் கொள்ளும் வாப்பு என்பது பெரும்பாலானோரின் அதிருப்தியைக் கொண்டு வந்து சேர்த்து விடுகின்ற வினையைத் தான் பெரும்பாலும் ஆற்றிவிடும் ஒரு தொவு நிலைபேற்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வரலாற்றில் ஏற்படுத்தி விடும் அபாயத்தையும் நாம் மறந்து விடலாகாது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஊடாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் பாரியளவில் இம்மாவட்ட மக்களின் பல பகுதியினர்களுக்கும் தொழில் வாப்பினை மறைந்த தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் அன்று துறைமுக அதிகார சபையில் வழங்கியது போன்று ஒரு நிறைவான கோணத்தில் தொழில்களை வழங்கிய பதிவைக் கொண்டிருந்தும் அந்தத் தொழிலைப் பெற்றவர்கள் உட்பட எதிராக அரசியல் செத நெருக்கடியையும் நெருடல்களையும் நாம் கண்டு கொண்டோம்.

இத்தகைய பதிவைக் கொண்டிருக்கும் இம்மாவட்டத்தில் யானைக்குப் பொறி தீனி போன்ற செயற்பாட்டை முன்னிறுத்தி தமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை இங்கு நிமிர்த்தி, நிற்பாட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் ககாங்கிரஸை வீழ்த்தி விடலாம் என்கின்ற எண்ணம் வெறும் நினைவு கோலத்தை மட்டுமே இங்கு வரைந்து விடும். இது ஓர் அரசியல் கட்சியின் எதிர்காலத்தை இல்லாமற் செது விடும் அறிவிப்பையே அக்கட்சியின் சரித்திரத்தில் எழுதி வைத்துவிடும் நிலை ஏற்படுவதற்குத்தான் பெருமளவிலான சந்தர்ப்பங்கள் உள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை வலிமைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பிரதேசங்களில் மத்திய குழுக்களை உருவாக்கும் இயங்குதளம் என்பது உண்மையில் ஓர் அரசியல் கட்சியின் ஸ்திரத்தன்மையிலும் நிரந்தர வாக்காளர் பெருக்கத்தை உறுதி செவதிலும் காரிய மாற்றக் கூடியது.அந்த வகையில் இந்தத் திட்டமிடலை கன கச்சிதமாக செவதற்கு ஆர்வம் காட்டப்பட்டு, முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதானது இக்கட்சியின் வேரூன்றலுக்கு பக்க பலமான முன்னகர்ச்சி என்பதில் ஐயமில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் இன்று பலர் படையெடுத்து வருவதாகவும் அவர்கள் தம்மோடு உறவைப்பெருக்கி வருவதாகவும் அரசியல் பிரமுகர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் அவர்கள் சுட்டிக் காட்டினார். இதற்குள் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் இருக்கும் போது என்னோடு இணைந்து பணியாற்றிய பலர் இன்று எம்மோடு இணைந்துபணியாற்ற முன்வந்திருக்கின்றனர் எனச் சnhல்லவும் தவறவில்லை.

இந்த கூற்றிலிருந்து எம்மை வேறொரு கோணத்தில் இதனை எடுத்து நோக்க வைக்கின்றது. இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பக்கம் தலை காட்டும் பெரும்பாலான ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியும் எதிர்ப்பும் உடையோர்களாகும். அதனால்தான் அவர்களின் முகங்களை ஜெமீலால் முன்னர் காணமுடியாமல் இருந்திருப்பதன் தாற்பரியமாகும்.

இது நமக்கு இன்னொரு கதையையும் சnhல்லிவைப்பதாகவும் அர்த்தம் எடுத்துக் கொள்ளவும் வழி விடுகின்றன. அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் ஜெமீல் இருக்கும் போது காணாதவர்கள் எப்போதும் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வந்தவர்களாகும். அவர்களிடம் எவ்விதமான மாற்றமும் நிகழவில்லை. 

மாறாக ஜெமீல் அவர்கள்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான உணர்வுள்ளவர்கள் பக்கம் போயிருக்கின்றார் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது.

இவ்வாறான கூற்றுக்கள் நிகழ்வுகள் என்பனவற்றை வைத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு இன்று அம்பாறை மாவட்டத்தில் பெருகி வருகின்றது என்கின்ற செதியை அப்படியே நம்பிக் கொள்வதில் கஷ்டமிருக்கின்றது.இந்தப் போலியான மதிப்பீடு இக் கட்சியின் ஆழமான காலூன்றலுக்கு எப்போதும் ஒரு பிரமையைத் தோற்றுவிக்க உதவுமே தவிர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் அளவில் எந்த விதமான மாற்றங்களையும் இன்றளவு கொண்டு வரவில்லை என்பதுதான் மெயான செதியாகப் பதிவு பெறுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை நிறுவிக் கொள்வதில் இன்றளவும் பலத்த இடரல்களையே எதிர் கொண்டு நிற்கின்றது. அதேநேரம் கிழக்கு மாகாணம் என்று எடுத்துக் கொண்டால், இம்மாகாணத்தின் ஏனைய திருமலை, மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குச் சமமான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

இதனையொத்த ஓர் அடைவு மட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு சரிநிகராக தன்னை நிலை நிறுத்துவதற்கான தம்மால் முடிந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதில் எத்தகைய சந்தேகங்களும் இல்லை.

இருந்த போதிலும் அதற்கான சாதகத் தன்மை மட்டும் அம்பாறை மாவட்டத்தில் இப்போதைக்கு அவருக்குக் கைகூடவில்லை என்றுதான் இன்று எம்மால் பதிவு செய முடிகின்றது. இதுதான் இம்மாவட்டத்தில் இன்றைய யதார்த்த பூர்வமான அரசியல் கள நிலவரமாகும். இதனைகட்டுடைப்புச் செய வேண்டிய காரணங்களும் தேவைகளும் இம்மாவட்ட நமது மக்களிடம் இருந்தும் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு உதவாது இருப்பது என்பதை விடவும் இம்மாவட்ட நமது மக்களின் எதிர்காலத்தைத்தான் இன்னும் சூனியமாக்கப் போகின்றது என்பது மட்டும்தான் இந்நிலையினால் நாமடைந்து கொள்ளக்கூடியதாக இருக்கப்போகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகைதான், அம்பறை மாவட்டத்தின் பக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வருகையை அதிகரிக்கச் செவதற்கு வழிசமைத்தது என்றொரு கருத்தினையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் உட்பட அதன் பிரமுகர்களிடம் இருந்து வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனை அவர்களின் கடந்த வார அம்பாறை மாவட்ட வருகையின் போது கலந்து கொண்ட சில கூட்டங்களில் பகிரங்கமாகக் கூறியும் உள்ளனர்.

இது சரியான கூற்றா என்று நாம் ஆராந்து பார்ப்பதை விடவும் அவர்களின் வருகையும், பரபரப்பும் இம்மாவட்டத்தில் இன்று அதிகரித்து இருப்பதன் திசை தலைமைத்துவத்தின் உச்ச இருப்பை உறுதி செவதுடன், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் செகின்ற இரு சக்திகளை கட்சியை விட்டு வெளியேற்றாது வெளியேற்றும் கைங்கரியத்தை ஈடேற்றிக் கொள்ளவும் இம்மாவட்ட மக்களின் பலத்தின் நிழலில் நின்று கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தையும் செல்வாக்கை இழக்கச் செயும் வகையில் தனது அரசியல் நகர்வுகளை வியூகம் செயும் வகையில் தனது அரசியல் நகர்வுகளை வியூகம் போட்டு நகர்த்துகின்றனர்.

இப்படி நாம் சnhல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அபிவிருத்தி என்ற மக்கள் நலனின் இன்னொரு பக்கத்தையாவது நிறைவேற்றி வைக்கும் அளவில் சிறிய அபிவிருத்தித் திட்டங்களையாவது இம்மாவட்ட மக்களுக்கு கொண்டுவரவில்லை. வெறும் வார்த்தை ஜாலங்களாக கல்முனை அபிவிருத்தி என்ற சnhல்லாடலை மட்டும் மொழிந்து கொண்டு அரசியல் செயும் அவலத்தில் இருந்து விடுபடாத கோணங்கள் இன்றும் இங்கு மறையவில்லை. அப்படியாயின் அபிவிருத்தி என்பது எப்போதும் நமது சாணக்கியத் தலைவருக்கு அலர்ஜியான விடயம்தான். இப்படி நாம் சnhல்வது எந்த விதமான ஆதாரங்களின் அடிப்படையுமின்றி அல்ல.

கடந்த 2001இல் அமைந்த பன்னிரெண்டாவது பாராளுமன்றக் காலத்தில் துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை மற்றும் கிழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் கலாசார அமைச்சுக்களின் அமைச்சராக இருந்திருக்கின்றார். பதினோராவது பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவதற்கு முன்னர் அதனை கலைக்கும் வகையில் பின்புலமாக இருந்த சக்திகளுக்கும் இவரது ஆதரவு இருந்தமையும் மிகவும் வெளிப்படையானது. இன்றைய பதினைந்தாவது பாராளுமன்றத்திலும் ரவூப் ஹக்கீம் அமைச்சராகவே இருக்கின்றார்.

நாம் மேற்சுட்டிக் காட்டும் இரண்டு பாராளுமன்றக் காலங்களும் நமது தலைவர் அபிவிருத்திக்கும் தமது செல்வாக்கினை தங்கு தடையின்றி பிரயோகித்துக் கொள்ளும் வகையிலான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கக் காலமாகும். அப்படி இருந்தும் இவர் இப்படித்தான் இருந்து வருகின்றார். இது அவரின் பொதுவான இயலாமையாகப் பார்க்கப்படல் வேண்டும். மாறாக பிரதேச வேறுபாட்டுச் சிந்தனையின் செயற்பாடாக நாம் நோக்கத் தேவை இல்லை.

இவ்வாறான ஒரு முடிவுக்கும் நாம் சும்மா வரவில்லை. அதற்கும் ஒரு நியாயமான காரணத்தை எம்மால் முன்வைக்க முடிகின்றது. அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே குறிப்பாக அவர் பிரதிநிதிப்படுத்துகின்ற கண்டி மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் அபிலாசைகளையாவது நிறைவேற்றுவதில் ஆர்வத்தையோ, அபிவிருத்தி முன்னெடுப்பையோ மேற்கொள்ளவில்லை. அதுவும் அவர் நம்பும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவ அரசாங்க காலமாக இருந்தும் ஆயின் தமது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்காமை அவரது செயற்திறன் மீதான பலவீனம் என்பது பலிச்செனத் தெரிகின்ற ஒன்றாகும்.

இப்படி நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை நோக்கக்கூடியதாக இருப்பதினால்த்தான் அவர் நமது மக்களுக்கான உரிமைத்துவ அரசியல் என்றாலும் சரி, அபிவிருத்தி அரசியல் என்றாலும் சரி இவற்றில் எதுவானாலும் சரிவர நிறைவேற்றிக் கொள்ளும் திறமை கொண்டவராக இல்லை. இப்படி இருந்தும் அம்பாறை மாவட்டத்தின் பக்கம் அடிக்கடி தலைவர் விஜயம் செவதன் பின் புலத்தின் பின்னணி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வரவு அல்ல. அது அவருக்கு ஒரு பொருட்டான விடயமும் அல்ல.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் போதைக்கு அடிமையாகியவர்கள் போல் தனிக்கட்சி என்றாலும் முஸ்லிம் கட்சி என்றாலும் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று அடிமைப்பட்டு வாழ்கின்றனர். இந்த நமது மக்களின் பலவீனம் தான் தலைவர் ரவூப் ஹக்கீமை பதவி வெறியில் மிகுந்த பிடிமானத்தை வளர்த்துக் கொள்வதற்கு வசதியாக அமைந்திருக்கின்றது. இந்த வசதியும் வசீகரமும் அண்மையில் நடைபெற்ற பத்தொன்பதாவது தேசிய மாநாட்டின் பின்னர் உரமேற்றப்பட்டும் உரத்தும் வாசிக்கப்படுகின்ற பேற்றை சுட்டிக் காட்டுகின்றது.

இதன் எதிரொலியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸனலி,தவிசாளர் பஷீர் சேகுதாவூத், மாகாணசபை உறுப்பினர் ஜவாத் போன்றவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில் அதற்கு அம்பாறை மாவட்ட தமது கட்சி ஆதரவாளர்கள் இசைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் திட்டமிட்டு காகளை நகர்த்துகின்றனர் என்பதுதான் உண்மை. இதற்கு திரைமறைவு செயற்பாடின்றி இல்லாமல் வெளிப்படையாகவே இதனைத் தூக்கிப்பிடிக்கின்றார்.

நமது அம்பாறை மாவட்ட மக்களும் தலைவரின் பொம்மலாட்டங்களை மெயான பக்கம் என்று நம்பி அதற்கு ஏற்ற நடனங்களை அரங்கேற்ற காத்திருப்போர்கள் போன்று இசைவாக்கம் அடைந்தும் காணப்படுகின்றனர். இதுதான் உண்மைநிலை. மேக்கக் கூடியவர்களாக இம்மாவட்ட மக்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். இதனால் இவர்களின் முதுகின் மீதேறி நடக்கும் பயணிக்கும் மிலேச்சத் தனத்தை நமது தலைவர் ரவூப் ஹக்கீம் அரங்கேற்றி வருகின்றார்.

முஸ்லிம் மக்களின் பெரும்பாலான குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அசைக்க முடியாத நம்பிக்கைக்குப் பாத்திரமான கட்சியாகவும் தலைவராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் இருக்கின்றார். இதன் உந்து சக்தியாக நாம் மேற் சுட்டிக் காட்டிய மூவரையும் குறிவைத்து செயற்படும் ஒரு பொறிமுறைக்கு இம்மாவட்டம் நமது மக்களை வசப்படுத்துவதற்கான வருகைகள் தான் அண்மைக்கால படையெடுப்பு என்று துணிந்து கூறமுடியும்.

ஆனால் முஸ்லிம் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுக் காணப்படும் கட்சியாகவும் அதன் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் சார்ந்திருந்தாலும் அம்மக்களின் எந்த விதமான அவலங்களுக்கும் தீர்வுகளை எதிக் கொள்ளும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கை எதுவுமில்லை. இது நமது அம்பாறை மாவட்ட மக்களுக்கும் பொருந்தும். இவற்றினை நாம் உணர்ந்தும் உணராதவர்களாக செயற்படும்வரை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆட்டம் முடிவுக்கு வராது.அதற்குள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் புகுந்து கொள்வதும் இவ்வளவு இலகு பட்டதல்ல என்பதுதான் ஒரு உறுதியா சமாச்சாரமாகும்.

¬¬¬



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.