(மாவத்தகம தினகரன் நிருபர்)
எமது தாய் மண் பல்லின மக்கள் சேர்ந்து வாழுகின்ற நாடாகும். இந்த நாடு ஒரு மதத்திற்கோ ஒரு இனத்திற்கோ சொந்தம் கொண்டாடக் கூடிய நாடல்ல. இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமான நாடாகும். இந்நாட்டில் அனைத்து மக்களுக்கும் 'நாம் இலங்கையர் என்ற நாட்டுப் பற்று அவசியம் இருத்தல் வேண்டும்.
நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்நாட்டினுடைய வளர்ச்சிக்காக பங்களிப்பைச் செய்வோமாயின் எமது நாட்டை பாரிய அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல முடியும். நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பணி மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு பிரஜைகளினதும் கட்டாயமான கடமையாகும் என்று தைபா கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி அமைப்பின் அஷ;nஷய்க் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி தெரிவித்தார்.
தைபா கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி அமைப்பினால் மாவனல்லை அரநாயக தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுத்தமான குடி வழங்கல் வைபவம் பாடசாலை அதிபர் எம். எஸ். எம். நவாஸ் தலைமையில் 08-04-2016 நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தைபா கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி அமைப்பின் அஷ;nஷய்க் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
தண்ணீர் அல்லாஹு தஆலா தம் அடியார்களுக்கு வழங்கிய மிகப்பெரிய அருட்கொடையாகும். இந்த அருட்கொடையை துஷ;பிரயோகம் செய்தல் மிகப்பெரிய குற்றமாகும். பூமியில் நீரை அளவுடன் தேக்கி வைத்துள்ளோம் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். இந்த நீரையின் அருட்கொடையை துஷ;பிரயோகம் செய்யும் போது இந்த நீரை நிலத்திலிருந்து சிலவேளை இல்லாமற் செய்யவும் செய்யவும் முடியும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலர் இரவு பகலாக நின்று வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள், ஆனால் ஏழை மக்கள் விடயத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். அவர்களுக்கு உணவளிக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லோரும் நரகம் செல்வார்கள் என குர்ஆன் தெளிவாக இயம்பி நிற்கின்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம். எஸ். எம். நவாஸ் உரை நிகழ்த்துகையில்
இந்தப் பாடசாலையில் மாணவர்கள் பயன்படுத்தப்படும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று இங்கு வருகை தந்த பொதுப் சுகாதார பரிசோதகர்கள் ஒரு அறிக்கை எங்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் எங்களுடைய மாணர்களுக்கு எங்கு சென்று சுத்தமான தண்ணீர் வசதியைப் பெற்றுக்கொள்ளலாம் என அங்கலாய்த்துக் கொண்டிருந்தோம். இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் உதவியால் இந்த நிறுவனம் முன்வந்து இந்த உதவியைச் செய்து தந்மைக்காக பாடசாலை ஆசிரியகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் பிரார்த்தi செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்
இந்நிகழ்வில் கௌர விருந்தினராகக் கலந்து கொண்ட மாவனல்லை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் அஷ;nஷய்க் நஜீம் கருத்துத் தெரிவிக்கையில்
நாம் அனைவரும் உற்ற நண்பர்கள் என்ற வகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இறுதியில் இவர்களுடைய உறவு மையவாடியுடன் நின்று விடும். மையடிவாக்குள்ளும் மையவாடிக்கு வெளியேயும் அவர்கள் எவரும் வர மாட்டார்கள். அதற்கு அப்பால் வருகின்றவர்கள் உண்மையான உயிர் நண்பர்கள். அத்தகைய உயிர் தோழர்களில் ஒருவர்தான் நாம் உயிரோடு இருக்கின்ற காலங்களில் செய்கின்ற தர்மங்கள். இந்த நல்ல செய்கைகள்தான் எமக்கு இறுதி நேரத்தில் கைகொடுக்கும். தனியாக இருக்கின்ற அந்த இருட்டறைக்குள் ஒளி கொடுக்கக் கூடியவை எமது நல்ல காரியங்களாகும். என்று மாவனல்லை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் அஷ;nஷய்க் நஜீம் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
தான் கொடுக்க வசதியில்லை. தனக்குத் தான் பஞ்சம். அடுத்தவனிடமிருந்து பெற்றுக் கொடுக்கவுமா பஞ்சம். அடுத்தவர் செய்கின்ற ஒரு நல்ல காரியத்தை ஒரு வார்த்தையால் வாழ்த்துவதற்காக பஞ்சம் என்ற நிலையில் இருத்தல் கூடாது. இவ்வாறு பஞ்சப்படுகின்றவர்கள் நாளை மறுமை நாளில் நரகில் இருப்பார்கள். அவர்கள் தொழுகையாளியாக இருந்தாலும் சரி, அவர்கள் ஹாபிழ்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய கதி அதுதான். எனவே எங்களால் முடியா விட்டாலும் அடுத்தவருடைய பணத்தை எடுதாவது சரி அல்லது கொடை வள்ளல்களைத் தூண்டியேனும் சரி ஒரு நல்ல பணி செய்வது சுவக்கவாசிகளின் அடையாளில் ஒன்று.
எனவே அந்தவகையில் ரிஸவான் மதனி தாம் கல்வி கற்றவர்களுடன் தொடர்பு கொண்டு இத்தகைய ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். அவருடைய கபுரையும் அல்லாஹ் ஒளி பொருந்தியதாக ஆக்க வேண்டும். அவருக்கு பண ரீதியாக உதவி செய்த சவூதி நாட்டவருக்கும் நல்லருள் கிடைக்க வேண்டும் என நாம் அனைவரும் பிரார்த்திப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்
(இக்பால் அலி ஊடாக)



