இன்று சிலர் பத்திரிகைகளில் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டுள்ளனர். நான் மௌனமாக இருந்து கொண்டு கட்சியை கச்சிதமாக வழி நடத்திக் கொண்டு போவதற்கு எண்ணுகின்றேன்.
இன்று ஏற்பட்டுள்ள சவால்களை விடவும் பெரிய சவால்களை சந்தித்துள்ளோம். இன்று ஏற்பட்டுள்ள குடும்பிச் சண்டையில் நான் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று பூர்த்தியாக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போது தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் நடை பெற்ற இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,கடந்த மாகாண சபைத் தேர்தலில் நாங் கள் தனித்துப் போட்டியிட்டு சம்மாந்துறைத்தொகுதியை வெற்றி கொண்டோம். அந்தத் தேர்தலில் எங்களுக்குரிய மாகாண சபை முதலமைச்சர் பதவியை சற்று தாமதப்படுத்தி கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச் சர் பதவியைப் பெற்றுக் கொண் டோம்.
அந்த அமைச்சர் பதவி மூலமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பல அபிவி ருத்திகளை செய்ய முடிந்துள்ளன. இந்த வைத்தியசாலை மட்டுமன்றி சூழவுள்ள ஏனைய வைத்தியசாலைகளும் அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக் கள் ஏற்பட்டுள்ளதையிட்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றோம்.
அடுத்த ஐந்தாம் திகதி தொடக்கம் பாராளுமன்றம் ஒரு அரசியல் யாப்பு சபையாக செயற்படவுள்ளது. வெகுவிரைவிலே இந்த நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பை உருவாக்கின்ற கட்டம் ஆரம்பமாக இருக்குகின்றது. இதன் போது எமது சமூகம் சார்ந்த விடயங்களையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்குரிய முயற்சிகளில் ஈடுபடவுள்ளோம்.
இரண்டு பிரதான கட்சிகளின் ஆட்சி நாட் டிலே இருக்கின்ற சூழலில் நாட்டில் பொருளாதார நெருக்கடி கொஞ்சம் உக்கிரம் அடைகின்ற பின் புலத்தில் நாங்கள் நீண்ட காலமாக
அடைவதற்கு காத்திருந்த அபிவிருத்திகளை சாதித்துக் கொள்வதற்கான தயார்படுத்தல்களை செய்து கொண்டு வந்துள்ளோம். என்னுடைய அமைச்சின் ஊடாக நீர்வழங் கல் வடிகாலமைப்பு சபை சம்மாந்துறை வங்களாவடியிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கல்முனை வரையிலான நீர் வழங் கல் திட்டத்தை மேம்படுத்துவதற்கான புதிய குழாய் பதிக்கும் வேலைகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன.
எதிர்வரும் நோன்பு காலத்திற்கு முன்னதாக இப்பிரதேசத்தில் நிலவும் நீர் வழங்கல் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கலாம் என்ற நம்பிக்கையோடு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றோம்.
மேலும், நெய்னாகாடு போன்ற பிரதேசங்களுக்கும் விரைவாக நீர் வழங்க நடவடிக்கைகளை எடுத்துள் ளோம். இதற்கு அடித்தளமிட்ட தலைவர் அஷ்ரப்பை நினைவு கூருகின்றோம்.
சும்மாந்துறை பிரதேசத்தினை நகர அபிவிருத்தித் திட்ட த்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ளோம். சம்மாந் துறைக்கு சந்தைக் கட்டிடத் தொகுதி, பஸ் நிலையம், நகர சபையாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகளை எடு த்துக் கொண்டு வருகின்றோம்.
கல்முனை நகரை அபிவிருத்தி செய்யும்போது அத னோடு இணைந்தவாறு சம்மாந்துறையும் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.

