மரத்திலேறி பொலிஸ் கான்ஸ்டபிள் ஆர்ப்பாட்டம்

Written By avathani Media Network on Sunday, April 3, 2016


சேவையிலிருந்து விலகிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மரத்திலேறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று மாத்தறை பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று(2) இரவு இடம்பெற்றுள்ளது. 

மேற்படி கான்ஸ்டபிளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே கான்ஸ்டபிள் மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது. 

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரை மிகுந்த சிரமத்தின் கீழ் மரத்திலிருந்து கீழே இறக்கியதாக தெரியவருகிறது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.