காத்தான்குடி குடியிருப்பு பகுதியில் முதலை பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு..

Written By avathani Media Network on Friday, April 1, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 06 டீன் வீதியிலுள்ள நீரோடை ஒன்றில் இருந்து சுமார் 3அடி சிறிய முதலை பிரதேசத்திற்குள் புகுந்துள்ளது இவ் முதலை பொதுமக்களால் நேற்று இரவு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதலையை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று 01.04.2016 இன்று காலை பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

மேற்படி முதலை 3அடி சிறிய முதலை மக்களுக்கு ஆபத்து விளைவிக்கின்ற பெரிய முதலை இல்லை என்பதாலும் மட்டக்களப்பு வாவியில் இருந்து வந்திருப்பதாலும், மட்டக்களப்பு வாவிக்குள் இம்முதலையை விட்டதாகவும் தெறிவிக்கப்படுகிறது...


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.