(S.சஜீத்)
ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள் தினத்தை முன்னிட்டு புகைப்பிடிப்பவர்களுக்கு இன்று பிறந்தநாள் எனத் தெரிவித்து விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று (01.04.2016) இன்று இடம்பெற்றன.
இந் நிகழ்வானது இளையோர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட மாணவர்கள் ஏற்பாட்டில் பல இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு மட்டக்களப்பு காந்தி பார்க் முன்பாக இருந்து ஆரம்பித்து, மட்டக்களப்பு பிரதான வீதிகள் ஊடாக பயணம் செய்து சிகரட் புகைப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள் எனக்குறிப்பிட்ட பதாதைகள் தொங்கவிடப்பட்டு, சுவரொட்டிகள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்து அட்டை போன்றன வழங்கிவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கேக் போன்று வடிவமைக்கப்பட்ட பெட்டி ஒன்றினை மாட்டு வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு வளம்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.










