(S.சஜீத்)
டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி மீன் பிடி இலாகா வீதியில் அமைந்து காணப்படும் பிர்தௌஸ் பாடசாலையில் (01.04.2016) இன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஓர் அங்கமாக காணப்படும் சமூகசேவைப் பிரிவின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றன.
இச் சிரமதான நிகழ்வில் அப்பாடசாலையில் காணப்படும் நீர்தேங்கி காணப்படக்கூடிய இடங்களுக்கு மண் இட்டு நிரப்பி மற்றும் டெங்கு அபாயம் ஏற்படுத்தக்கூடிய இடங்களில் காணப்படும் புற்களை அகற்றி மலசல கூடங்களை சுத்தம் செய்து சுகாதராம் நிறைந்த இடமாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் இப்பாடசாலையினை மாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்










