கோறளைப்பற்று பிரதேச கலாசார விழா.

Written By avathani Media Network on Thursday, April 7, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச கலாசார அதிகார சபையினால் நாட்டார் கலை விழா வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வியாழக்கிழமை இன்று நடைபெற்றது.

பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவர் ஆசிரியை திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை இந்துக்கல்லூரி அதிபர் ஜெ.ஜெயஜீவன்,அண்ணாவியார் செ.நல்லதம்பி,கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களான ஏ.நஜீம்,க.ஜெகதீஸ்வரன் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார அதிகார சபையின் உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அத்தோடு அண்ணாவியார் செ.நல்லதம்பியின் சேவையைப் பாராட்டி பிரதேச கலாசார அதிகார சபையினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.