(எம்.ரி.எம்.யூனுஸ்)
அறபு இலக்கிய நயம்- ஒழுங்கு படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் தொடர்பான அறிமுகக் கருத்தரங்குகளை நாடளாவிய ரீதியில் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக வடமேல் மாகாணத்திற்கான செயலமர்வு எதிர்வரும் 24, 25 ஆகிய தினங்களில் மாகாண கல்வித் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அறபு இலக்கிய நயம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்விப் பணிமனையூடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலந்துகொள்ளவிரும்புபவர்கள் மாகாணக் கல்விப் பணிமனையூடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

