காலி ஹோமதொல பிரதேசத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான 25 வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது.
பெருந்தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள இவ் வீடமைப்பு திட்டமானது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கடடமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புக்கு அமைய மலைநாட்டு புதிய கிராமங்கள்> உட்கடடமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இவ் அடிக்கல் நாட்டு நிகழ்வில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கெளரவ கயந்த கருணாதிலக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெளரவ வஜிர அபயவர்த்தன ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.


