பாகிஸ்தான் அணி தோல்வி பரம ரசிகர் தற்கொலை

Written By We Are Anonymous on Saturday, March 5, 2016


ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், விரக்கி அடைந்த ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பங்களாதேஷ் அணியுடன், பாகிஸ்தான் அணி மோதியது. இதில், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என பாகிஸ்தானின் நீர்வளத்துறை அலுவலகத்தில் ஜூனியர் எழுத்தராக பணியாற்றி வந்த சேர்ந்த முகம்மது சபீக் (50) என்பவர் தனது ஒரு மாத சம்பளமான ரூ.30 ஆயிரத்தை பந்தயமாக கட்டியிருக்கிறார்.

ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால், விரக்தி அடைந்த முகம்மது சபீக் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.