நன்றாக அழுங்கள் அப்போதுதான் நாங்கள் படும் துன்பங்களை வெளிஉலகத்திற்கு எடுத்துக் கூறுவீர்கள்- காஸா மக்களின் அவலக் குரல்

Written By avathani Media Network on Saturday, March 5, 2016


எம்.எச்.எம்.அன்வர்-

தென்இந்திய பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளரும் பலஸ்தீன நாட்டுக்கு நேரடியாக சென்று அம்மக்கள் படும் துன்ப துயரங்களை கேட்டும் கண்டும் இலங்கை வந்துள்ள திரு அ.முத்து கிருஷ்ணன் அவர்கள் நேற்று காத்தான்குடி பிஸ்மி தலைமையகத்திற்கு சமூகமளித்திருந்தார்

இவரிடம் தனது பலஸ்தீன நாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமுகமாக ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் கல்விமான்கள் கலந்துகொண்டு கலந்துரையாடினர் இதற்கிணங்க தாம் பலஸ்தீனத்திற்கு சர்வதேச ஊடகவியலாளர் குழுவின் சார்பில் சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை தற்போது எவ்வாறு உள்ளது என்பதையும் நேரடியாக யுத்தத்தில் சிக்கியுள்ள அம்மக்களை கண்டு சந்தித்து வந்ததாக அவர் தெரிவித்தார்

அவர் மேலும் தனதுரையில்

அந்நாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள், உணவுத்தட்டுப்பாடுகள,; மருந்து வகைகள் இன்மை, அங்கவீனம், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் படும் வேதனைகள், கஷ்டங்கள் இத்தனைக்கு மத்தியிலும் குண்டுச்சத்தங்களும் பீரங்கி வேட்டுக்களும் நாளாந்தம் கேட்ட வண்ணமேயுள்ளன எனவும் தெரிவித்தார்

நாங்கள் இவைகளைபார்த்து அழுதுவிட்டோம் இதனைப்பார்த்த அம்மக்கள் நன்றாக அழுங்கள் அப்போதுதான் நாங்கள் படும் துன்பங்களை வெளிஉலகத்திற்கு எடுத்துக் கூறுவீர்கள் எனக் கூறினர்

மேற்படி கலந்துரையாடலின்போது திரு முத்துகிருஷ்ணன் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது இதற்கு பதிலளித்த அவர் 

அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தின்போது இஸ்லாமிய சகோதரர்களின் மனித நேயப்பண்பினை யாரும் மறக்க முடியாது எனவும் இதற்கு முதல் இனங்களுக்கிடையில் இருந்த ஒரு சில கசப்பான நிகழ்வுகளையும் அந்த பத்து நாள் அனர்த்த பணியானது சீராக்கி விட்டதாகவும் ஊடகவியலாளர் நினைவு படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது 











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.